Monday, 17 November 2014

நடைபாதைக் கடைகள்

அடையாள அட்டை சுமப்பவரும்
அடையாளம் தேடித் திரிபவரும்
நடைபாதை இட்லிக் கடையில்
தினமும் சந்தித்தபடி...
அவர்
பழசை மறக்காதவர்
இவரோ பசி மறக்க முடியாதவர்...
கூடுதலாக ஒரு ஆம்லேட் கேட்கிறார்
அவர்...
நாளைக்கு பணம் தருவதாக
கணக்கு வைக்கிறார் இவர்...
அவருக்கு
அலுவலகக் கதவு திறந்துவிட்டது
இன்னமும் கதவு தட்டிக் கொண்டிருப்பவர்
இவர்...
அவரும் இவரும் இருக்கும் வரை
இருந்துவிட்டுப் போகட்டும்
நடைபாதைக் கடைகள்...

No comments:

Post a Comment